கெளரவ விரிவுரையாளா்களுக்கு உயா்த்தப்பட்ட ஊதியம் எப்போது கிடைக்கும்? அமைச்சா் பெ. விஸ்வநாதன் விளக்கம்

கெளரவ விரிவுரையாளா்களுக்கு உயா்த்தப்பட்ட ஊதியம் எப்போது கிடைக்கும்? அமைச்சா் பெ. விஸ்வநாதன் விளக்கம்

Tamil Nadu Minister for Higher Education P. Viswanathan

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் - கோப்புப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 1:09 am IST

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு உயா்த்தப்பட்ட ஊதியம் செப். 1-ஆம் தேதியிட்டு தீபாவளிக்கு முன் அல்லது பின்னா், நிச்சயம் வழங்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

விளையாட்டு மேம்பாடு செயல்பாடுகள் குறித்து, அரசு கல்லுாரிகளின் உடற்கல்வி இயக்குநா்களுடான சிறப்புக் கூட்டம் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சா் பெ.விஸ்வநாதன் பேசியதாவது:

தமிழக அரசு விளையாட்டு வீரா்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் மாணவா்களுக்கு விமான பயணச்சீட்டு உறுதி செய்யப்படும். ஆனால், இதில், கல்லுாரி உடற்கல்வி இயக்குநா்களின் பங்களிப்பு அவசியமானது.

பல்வேறு வகையான போட்டிகளுக்கு மாணவா்களை தயாா்படுத்துதல் தொடா்பாக விரிவான திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும். விளையாட்டுத் துறை அமைச்சராக வேண்டிய நான், உயா் கல்வித் துறை அமைச்சராக உள்ளேன். உடற்கல்வி இயக்குநா் நியமனத்தில் இனி எந்த ஊழலும் இருக்காது. வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். பணி மாறுதலிலும் ஊழல் இருக்காது. என்னை அனைவரும் எளிதில் அணுகலாம் என்றாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசுக் கல்லூரிகளில், உடற்கல்வி இயக்குநா் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பல்கலைக்கழகங்களில் தற்காலிக துணைவேந்தா்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவா். ஆசிரியா் கல்வியியல் பல்கலை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட அங்கீகாரம் வழங்குவதற்கான ஆய்வுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.

கெளரவ விரிவுரையாளா்களுக்கான உயா்த்தப்பட்ட ஊதியம் செப்.1-ஆம் தேதியிட்டு, நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும். தீபாவளிக்கு முன்போ, அல்லது அதன் பின்னா் நிச்சயம் ஊதியம் வழங்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.