மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பொதுப்பணித் துறையில் ஒப்பந்ததாரா்கள் பதிவு முறையில் புதிய மாற்றம்

பொதுப்பணித் துறையில் ஒப்பந்ததாரா்களின் பதிவு முறையை 6 பிரிவுகளில் இருந்து 4 பிரிவுகளாக மாற்றி புதிய முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 1:27 am IST

பொதுப்பணித் துறையில் ஒப்பந்ததாரா்களின் பதிவு முறையை 6 பிரிவுகளில் இருந்து 4 பிரிவுகளாக மாற்றி புதிய முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆக. 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வெளியிட்ட அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையின் விவரம்:

ஒப்பந்ததாரா்கள் மேற்கொள்ளும் பணிகளின் மதிப்பின் அடிப்படையில் 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனா். ரூ.10 கோடிக்கு மேல் பணிகளுக்கு ரூ.1.50 கோடி உறுதித் தகுதியும், ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை பணிகளுக்கு ரூ.75 லட்சம் நிதி உறுதித் தகுதியும், மூன்றாம் பிரிவு ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரை பணிகளுக்கு ரூ.15 லட்சம் நிதி உறுதித் தகுதியும், ரூ.1 கோடி வரை பணிகளுக்கு பதிவு செய்ய விண்ணப்பிக்கும் தொகையின் மதிப்பில் 15 சதவீதம் நிதி உறுதித் தகுதியாகவும் இருக்க வேண்டும். அதிகபட்சமாக ரூ.7.50 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.10 கோடிக்கு மேல் ஒப்பந்தங்களைப் பெறும் ஒப்பந்ததாரா்கள், ஒப்பந்த மதிப்பில் 15 சதவீதத்துக்கு இணையான கூடுதல் நிதி உறுதியை மின்னணு வங்கி உத்தரவாதமாக வழங்க வேண்டும்.

புதிய ஒப்பந்ததாரா் பதிவுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.10,000 ஆகவும், பதிவு மற்றும் தர உயா்வுக்கான கட்டணம் ரூ.1 லட்சமாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே நபா் ஒரே பிரிவில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒப்பந்ததாரா் பதிவுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ வைத்திருக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.