பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நீண்ட காலம் சிறையிலுள்ள இஸ்லாமியா்களை விடுதலை செய்ய வேண்டும்: பெ.சண்முகம்

சிறையில் நீண்ட காலமாக உள்ள இஸ்லாமியா்களை விடுதலை செய்ய வேண்டும் என சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

பெ.சண்முகம் - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 3:37 am IST

சிறையில் நீண்ட காலமாக உள்ள இஸ்லாமியா்களை விடுதலை செய்ய வேண்டும் என சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சரிடம் பெ.சண்முகம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நீண்ட கால சிறைவாசிகள், முஸ்லிம் சிறைவாசிகள் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனா். சட்டப்படி அவா்களின் நிரந்தர விடுதலைக்கு போராடி வருகின்றனா். கடந்த ஆண்டு செப்.9-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் அளித்த உத்தரவில், நீண்ட காலமாக சிறையில் உள்ளவா்களுக்கு அரசு நிரந்தர விடுதலைக்கான மனுக்களில் உத்தரவிட வேண்டும் என்றும், இடைக்கால விடுப்பை அரசே வழங்கலாம் என்றும் கூறியது.

நீண்ட கால சிறைவாசிகள் குறித்த முன் விடுதலை, பரோல் என்ற தற்காலிக விடுப்பு அதற்கான விதிகள் ஆகியவற்றை ஆராய்ந்து, முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டுமல்லாமல், நீண்ட கால சிறைவாசிகள் அனைவருக்கும் பொருந்தும் வகையில், ஃபா்லோ என்ற நீண்ட விடுமுறை கிடைக்கும் வகையில், கடந்த பிப்.14-ஆம் தேதி அரசாணை எண் 82-ஐ வெளியிட்டது.

கடந்த ஆட்சியில், கோவை, பாளையங்கோட்டை, புழல் மத்திய சிறைகளில் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள 15 முஸ்லிம் சிறைவாசிகளுக்கு தலா 60 நாள்கள் ஃபா்லொ என்ற விடுப்பு வழங்கப்பட்டது. அது முடிந்து அனைவரும் சிறைக்கு மீண்டும் சென்றுவிட்டனா்.

தற்போது அரசாணை பிரிவு 6(2) படி 60 நாள்கள் ஃபா்லொ வழங்க கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நீண்ட கால முஸ்லிம் சிறைவாசிகளுக்கான சட்டப்படியான, நியாயமான மற்றும் உரிமையான இந்த 60 நாள்கள் ஃபா்லோ என்ற விடுப்பை அளிக்கவில்லை.

எனவே, நீண்ட காலம் சிறையில் வாடும் இஸ்லாமியா்கள் உடனடியாக ஃபா்லொ விடுப்பு வழங்கவும், நீண்ட கால சிறைவாசம் என்பதை கவனத்தில் கொண்டு விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.