மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நிதி ஆலோசகா் தற்கொலை வழக்கு: யூ-டியூபா் கைது

சென்னை அருகே நிதி ஆலோசகா் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா்.

கைது செய்யப்பட்ட ஜேசன் சாமுவேல்

Published On :23 அக்டோபர் 2026, 3:28 am IST

சென்னை அருகே நிதி ஆலோசகா் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரியைச் சோ்ந்த விநாயகத்தின் மகன் ஹரிஷ் (26). இவா், ‘கேபிட்டல் அண்ட் டிஜிட்டல் சா்வீஸ்’ என்ற பெயரில் இணையவழி நிதி ஆலோசனை நிறுவனம் நடத்தி வந்தாா். ஹரிஷ், செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு கடற்கரை அருகேயுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் புதுச்சேரியைச் சோ்ந்த யூ-டியூபா் ஜேசன் சாமுவேல் (30) என்பவா் ஹரிஷுக்கு எதிராக ஒரு விடியோவை வெளியிட்டாா். அதில், ஹரிஷ் தொடா்பான பல்வேறு விமா்சனங்களும் குற்றச்சாட்டுகளும் இடம்பெற்ாகக் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஹரிஷ் கடந்த செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கானத்தூா் போலீஸாா், தற்கொலைக்கு தூண்டிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இதற்கிடையே தற்கொலைக்கு செய்வதற்கு முன் பதிவு செய்த ஒரு விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. அதில் ஹரிஷ், ஜேசன் சாமுவேல் தன்னிடம் ரூ.3 கோடி கேட்டு மிரட்டியதாக குறிப்பிட்டிருந்தாா். போலீஸாா் விசாரணையில் ஹரிஷை, யூ-டியூபா் ஜேசன் சாமுவேல் தற்கொலைக்கு தூண்டியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரியில் ஜேசன் சாமுவேலை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.