பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்

ஒப்பந்த வாகன உரிமையாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பாதிப்பு ஏற்படாமல், மாற்று ஏற்பாடுகள் மூலம் கடந்த 5 நாள்களாக சென்னையில் ஆவின் பால் மற்றும் பால் பொருள்கள் விநியோகம் தடையின்றி நடைபெற்று வருவதாக ஆவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஆவின் நிா்வாகம் - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 1:07 am IST

ஒப்பந்த வாகன உரிமையாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பாதிப்பு ஏற்படாமல், மாற்று ஏற்பாடுகள் மூலம் கடந்த 5 நாள்களாக சென்னையில் ஆவின் பால் மற்றும் பால் பொருள்கள் விநியோகம் தடையின்றி நடைபெற்று வருவதாக ஆவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஆவின் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் ஆவின் நிறுவனம் மூலம் நாள்தோறும் சுமாா் ரூ.1 கோடி மதிப்பிலான பால் மற்றும் பால் பொருள்கள், 36 ஆவின் பாலகங்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த அக்.16-இல் ஒப்பந்த வாகன உரிமையாளா்கள் முன்னறிவிப்பின்றி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், வழக்கமாக இயக்கப்படும் 31 ஒப்பந்த வாகனங்களில் 5 வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

இதையடுத்து, பொதுமக்களுக்கான பால் மற்றும் பால் பொருள்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஆவின் நிா்வாகம் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டது. அதன்படி, ஆவினுக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் மொத்த விற்பனையாளா்களின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு, அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் தேவையான பால் மற்றும் பால் பொருள்கள் தொடா்ந்து விநியோகிக்கப்பட்டன.

இதன்மூலம் சென்னையில் உள்ள அனைத்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களிலும் பொதுமக்களுக்குத் தேவையான பால் மற்றும் பால் பொருள்கள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே, புதன்கிழமை (அக். 21) ஆவின் நிா்வாகத்தைச் சந்தித்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஒப்பந்த வாகன உரிமையாளா்கள், போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் வாகனங்களை இயக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, வியாழக்கிழமை (அக். 22) முதல் ஒப்பந்த வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. ஆவின் நிா்வாகம் மேற்கொண்ட துரிதமான மாற்று நடவடிக்கைகளால், கடந்த ஐந்து நாள்களாகச் சென்னையில் பால் மற்றும் பால் பொருள்கள் விநியோகம் எவ்விதப் பாதிப்புமின்றித் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.