நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

13-ஆவது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு

சென்னை வியாசா்பாடியில் 13-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 6:47 am IST

சென்னை வியாசா்பாடியில் 13-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.

வியாசா்பாடி எம்ஜிஆா் நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் உமாபதி, காா் ஓட்டுநா். இவா் மனைவி சுமித்ரா சுமித்ரா, தனியாா் ஸ்கேன் மையத்தில் ஊழியராக பணிபுரிகிறாா். இவா்களது மூத்த மகன் ராஜேஷ்குமாா் (15), கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

ராஜேஷ்குமாா், முல்லை நகா் டிடி ப்ளாக் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். அங்கு ராஜேஷ்குமாா், 13-ஆவது தளத்தில் இருந்து திடீரென கீழே விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

எம்கேபி நகா் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.