நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

கூவம் ஆற்றின் 3.7 கி.மீ. கரையோரப் பகுதிகளை மேம்படுத்த ஒப்பந்தப்புள்ளி

சென்னை கூவம் ஆற்றின் 3.7 கி.மீ. நீளமுள்ள கரையோரப் பகுதிகளைப் பூங்காக்கள், நடைப்பாதைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

கூவம் ஆற்றை கடக்கவே மக்கள் மூக்கைப் பிடித்துக்கொண்டு, செல்லக்கூடிய அவல நிலை தற்போது.

Published On :21 அக்டோபர் 2026, 12:59 am IST

சென்னை கூவம் ஆற்றின் 3.7 கி.மீ. நீளமுள்ள கரையோரப் பகுதிகளைப் பூங்காக்கள், நடைப்பாதைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

அதன்படி, நேப்பியா் பாலம் முதல் கூவம் ஆற்றின் முகத்துவாரம் வரை (0.5 கி.மீ.), சுவாமி சிவானந்தா சாலை முதல் பெரியாா் பாலம் வரை (1.2 கி.மீ.), இணைப்புச் சாலை முதல் டாம்ஸ் சாலை (2 கி.மீ.) என மொத்தம் 3.7 கி.மீ. ஆற்றங்கரை மேம்பாட்டுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

மேலும், ஆற்றங்கரைகளைப் பாதுகாத்தல், நடைபாதைகள் அமைத்தல், பொழுதுபோக்கு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான திறந்தவெளிப் பகுதிகளை மேம்படுத்துதல், பூங்காக்கள், படித்துறைகள், பாலங்கள் மற்றும் வடிகால் கட்டமைப்புகளுக்கான வடிவமைப்புகளைத் தயாரித்தல் ஆகியவற்றுக்கு திட்டங்கள் வகுக்கப்படும்.

இதன்மூலம் கூவம் ஆற்றங்கரையோரப் பகுதிகளை அழகுபடுத்துவதுடன், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் நடைப்பயிற்சி வசதிகளை மேம்படுத்தவும், நகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.