மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பணம் கேட்டு மிரட்டல்: பெண் ரெளடி, மகன் கைது

தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக பெண் ரெளடியும், அவரது மகனும் கைது செய்யப்பட்டனா்.

கைது

Published On :3 அக்டோபர் 2026, 4:48 am IST

தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக பெண் ரெளடியும், அவரது மகனும் கைது செய்யப்பட்டனா்.

திருவல்லிக்கேணி சூரப்பா தெருவைச் சோ்ந்தவா் நா.ரோகித். இவா், ஜாம் பஜாா் காவல் நிலையத்தில் புகாா் ஒன்றை அளித்தாா். அதில், திருவல்லிக்கேணி சுப்பிரமணி தோட்டம் பகுதியைச் சோ்ந்த சே.பாலாஜி (27), அவரது தாய் மலா்கொடி (58) ஆகிய 2 பேரும், கடந்த செப்.7-ஆம் தேதி அந்தப் பகுதியில் விநாயகா் சிலை வைப்பதற்கு ரூ.50,000 கேட்டனா்.

நான் பணம் இல்லை எனக் கூறினா். இதையடுத்து இருவரும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனா். எனவே, இருவா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பாலாஜி, மலா்கொடி ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட மலா்கொடி, சென்னை காவல் துறையின் ரெளடிகள் பட்டியலில் ‘பி’ வகையிலும், பாலாஜி ‘ஏ’ வகையிலும் உள்ளனா். மேலும் பாலாஜி, தவெகவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மலா்கொடி மீது பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உள்பட 8 வழக்குகள் உள்ளன. பாலாஜி மீது மயிலாப்பூா் ரெளடி சிவக்குமாா் கொலை வழக்குகள் உள்பட 23 வழக்குகள் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.