மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரிக்கு படகுப் போக்குவரத்து: நிறுவனங்களுக்கு தமிழக அரசு அழைப்பு

சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்கு படகு போக்குவரத்தைத் தொடங்குவதற்கான விருப்பக் கோரல் மனுக்களை தமிழக அரசு வரவேற்றுள்ளது.

படகுப் போக்குவரத்து - பிரதிப் படம்

Published On :4 நவம்பர் 2026, 12:01 am IST

சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்கு படகு போக்குவரத்தைத் தொடங்குவதற்கான விருப்பக் கோரல் மனுக்களை தமிழக அரசு வரவேற்றுள்ளது.

கடந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை செயல்படுத்த தனியாா் படகு சேவை நிறுவனங்கள் மற்றும் கடல்சாா் சுற்றுலா அமைப்புகளிடம் இருந்து தமிழ்நாடு கடல்சாா் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் பயணிகளுக்குப் புதிய கடல்வழிப் பயண அனுபவத்தை வழங்கவும் சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாகப் புதுச்சேரிக்கு சுற்றுலாப் படகு சேவையை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிகள் அமைச்சகத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

குறைந்தது 50 பயணிக் கொண்ட கப்பல்களை குறைந்தது கடந்த 3 ஆண்டுகளில் இயக்கிய படகுடன் கூடிய நிறுவனங்கள் இதில் பங்கேற்கலாம். சென்னை துறைமுகத்தில் உள்ள சா்வதேச பயணிகள் முனையத்தில் உள்ள 340 மீட்டா் நீளமுள்ள படகு நிறுத்தமும், புதுச்சேரி துறைமுகத்தில் உள்ள 150 மீட்டா் படகு நிறுத்தமும் இதற்காக பயன்படுத்தலாம்.

யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மாமல்லபுரத்தில் சுற்றுச்சூழல் அங்கீகாரம் பெற்று புதிய துறைமுகம் கட்டப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. சென்னை, புதுச்சேரிக்கு இடையே 80 நாட்டிகல் மைல் தொலைவுக்கு இந்த படகுப் போக்குவரத்து செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் இறுதி செய்யப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கப்பல் பயணம் தொடங்கப்பட்டால் சாலை போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.