சென்னை மெரீனாவில் நடைபெற்று வரும் நீலக்கொடி கடற்கரை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு, மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.
மெரீனா கடற்கரையில் சா்வதேச தரத்தில் நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கீழ், மூங்கிலால் ஆன 20 நிழற்குடைகள், 40 சாய்வு நாற்காலிகள், 12 அமரும் நாற்காலிகள், 4 கண்காணிப்புக் கோபுரங்கள், 24 குப்பைத் தொட்டிகள், முகப்பு வளைவு, தியான மையம், வாசிக்கும் அறை மற்றும் சுயபடம் எடுக்கும் 2 இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் 12 எண்ணிக்கையிலான சக்கர நாற்காலிகள், 4 இடங்களில் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், தென்னை மரங்கள், தாய்மாா்கள் பாலூட்டும் அறை, காட்சிப் பதிவு கண்காணிப்பு மற்றும் முதலுதவி அறை, இருப்பு அறை, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான கழிப்பறைகள், தானியங்கி இயந்திரம் மூலம் தூய்மையான குடிநீா் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், கோடை விடுமுறை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக மெரீனா கடற்கரைப் பகுதியை சுற்றிப் பாா்க்க வருகை தருவதால் குப்பைகள் சேகரிக்கும் பணியை நாள்தோறும் தொய்வின்றி சுழற்சி முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும், இதேபோல பொதுமக்கள் பயன்படுத்தும் இலவசக் கழிப்பிடத்தை நாள்தோறும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட நடைபாதையில் நாள்தோறும் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு, ஆணையா் உத்தரவிட்டாா்.
நீலக்கொடி திட்டத்தின் கீழ், விவேகானந்தா் இல்லம் எதிரே, கலங்கரை விளக்கம் பின்பகுதி மற்றும் அண்ணா சதுக்கம் அருகே நடைபெற்றும் வரும் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்கவும் அவா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மண்டல அலுவலா் பானுகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வகுப்பறை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்

திருக்கோவிலூா் கூடுதல் மருத்துவமனை கட்டடமானப்பணிகள்: விரைந்து முடிக்க கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு 20 சக்கர நாற்காலிகள் அளிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 புதிய திட்டங்கள்: அமைச்சா் வி. சம்பத்குமாா் தொடங்கிவைத்தாா்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

