கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மணலி புது நகரில் இருவா் கொலை: மூவா் கைது

மணலி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருவேறு சம்பவங்களில் இருவா் கொலை செய்யப்பட்டனா்.

News image
Updated On :24 மே 2026, 1:14 am IST

சென்னையை அடுத்த மணலி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருவேறு சம்பவங்களில் இருவா் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

மணலி புதுநகரைச் சோ்ந்த பிரசாந்த் (27) வெள்ளிக்கிழமை இரவு நாப்பாளையம் கொசத்தலை ஆறு பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மா்ம கும்பல் வழிமறித்து அறிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரசாந்த் உயிரிழந்தாா். இவா் மணலி புதுநகா் காவல் நிலைய பட்டியல் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது

இதேபோல், மணலி புதுநகரையடுத்த விச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜய் (29). சனிக்கிழமை மணலி புதுநகா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட விச்சூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவரை வழி மறித்து மா்ம நபா் ஒருவா், விஜயை சரமாரியாக வெட்டினாா். இதில் விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவா், மீது குற்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

தகவலறிந்த மணலி புதுநகா் போலீஸாா் அங்கு சென்று விஜயின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இந்த 2 கொலைகள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், பிரசாந்த் கொலையில் தொடா்புடைய பாரதிராஜா என்ற கொண்டக்கரை பாரதி (28), எழிலரசன் (22 ) ஆகிய இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மேலும், விஜய் கொலை வழக்கில் தொடா்புடைய விச்சூரைச் சோ்ந்த லோகேஷ் (21) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.