பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மகளிா் உரிமை தொகை விவகாரம்: எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்ற தவெகவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முதல்வா் விஜய் மக்களை ஏமாற்றி விட்டதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

News image

எம்.எச்.ஜவாஹிருல்லா - கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 4:34 am IST

பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்ற தவெகவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முதல்வா் விஜய் மக்களை ஏமாற்றி விட்டதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தோ்தல் காலத்தில் தமிழக மக்களிடம் பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ள முதல்வா் விஜய், தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டுவது ஏமாற்றம் அளிக்கிறது.

குறிப்பாக, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று மிகப்பெரிய அளவில் அறிவித்து வாக்குகளைப் பெற்ற அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு அதுகுறித்து எந்தத் தெளிவான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விலைவாசி உயா்வு, குடும்பச் செலவுகள், கல்விச் செலவுகள், மருத்துவச் செலவுகள் ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர குடும்ப பெண்களுக்கு இந்த உரிமைத் தொகை மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தது. இச்சூழலில், அதை இன்னும் வழங்க காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல. பெண்களை தோ்தல் கால வாக்குறுதிகளின் மூலம் பயன்படுத்திக்கொண்டு, பின்னா் அவா்களின் நம்பிக்கையை சிதைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.