தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

டெங்கு தடுப்பு நடவடிக்கை: சுகாதாரத் துறை உத்தரவு

பருவ நிலை மாற்றமடைந்து வருவதால் டெங்கு கொசு உற்பத்தியைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை அமல்படுத்துமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

News image

டெங்கு பரவல் - பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 6:21 am IST

பருவ நிலை மாற்றமடைந்து வருவதால் டெங்கு கொசு உற்பத்தியைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை அமல்படுத்துமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிவுறுத்தல்கள்: அதீத வெப்பநிலை, சீரற்ற மழைப் பொழிவு, வானிலையில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள், வைரஸ் கிருமிகள் பரவல் ஆகியவை டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்திக்கு வழிவகுக்கின்றன.

வழக்கமாக உள்ள கண்காணிப்பு மற்றும் நோயத் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் சவாலை அளிக்கும் வகையில் இந்தக் காரணிகள் அமைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் தீவிரமாக இருந்தது. உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறையின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் காரணமாக கடந்த ஆண்டு பாதிப்பு விகிதமும், இறப்பு எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தது.

நிகழாண்டில் அதை மேலும் குறைப்பதற்கு சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம். அதன்படி, சுகாதார இணையப் பக்கத்தில் டெங்கு பாதிப்புகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றுவது அவசியம். அப்போதுதான் நிகழ் நேர தகவல்கள் கிடைக்கப்பெற்று டெங்கு பரவலைத் தடுக்க முடியும்.

நோய் பரப்பும் பூச்சிகள், கொசுக்களைக் கண்காணித்து அவற்றின் உற்பத்தியை குறைக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம். அரசு மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனைகளை கட்டணமில்லாமல் மேற்கொள்வதற்கான கட்டமைப்பு தயாா் நிலையில் இருத்தல் வேண்டும். குறிப்பாக பரிசோதனை உபகரணங்கள் போதிய எண்ணிக்கையில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

கொசு உற்பத்திக்கு இடமளிக்காத வகையில் வீடுகள், தொழில்நிறுவன வளாகங்களைப் பராமரிப்பது முக்கியம். நோய் சாா்ந்த சூழல்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.