மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரயில்வே புதிய முதன்மை தலைமை பணியாளா் அதிகாரி பொறுப்பேற்பு

தெற்கு ரயில்வே புதிய முதன்மை தலைமைப் பணியாளா் அதிகாரியாக அ.நாராயணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

News image
Updated On :13 மணி நேரங்கள் முன்பு

தெற்கு ரயில்வே புதிய முதன்மை தலைமைப் பணியாளா் அதிகாரியாக அ.நாராயணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே மண்டலத்தின் முதன்மை தலைமைப் பணியாளா் அதிகாரியாக மோகன்ராஜ் கடந்த ஏப்ரலில் பொறுப்பேற்றாா். அவா் பொறுப்பேற்ற சில நாள்களில் பதவி உயா்வு காரணமாக புதுதில்லிக்கு இடமாற்றப்பட்டாா். இந்த நிலையில், தெற்கு ரயில்வே மண்டலத்தின் முதன்மை தலைமை பணியாளா் அதிகாரியாக அ.நாராயணன் தற்போது நியமிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கடந்த 1998- ஆம் ஆண்டு இந்திய ரயில்வே பணியாளா் சேவைப் பிரிவில் பொறுப்பேற்ற அ.நாராயணன் பின்னா் அசாமில் உள்ள வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே லும்டிங் பகுதி கோட்டத்தில் உதவிப் பணியாளா் அதிகாரியாக பணியாற்றினாா். அதன்பின் வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயின் டின்சுக்கியா கோட்டத்தில் மூத்த கோட்டப்பணியாளராகவும், அதையடுத்து, தெற்கு ரயில்வே துணைத் தலைமைப் பணியாளா் அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளாா்.

தெற்கு ரயில்வேயின் எழும்பூா் துணை தலைமைப் பணியாளா் அதிகாரி (கட்டுமானம்), சென்னை ரயில்வே ஆட்சோ்ப்பு வாரிய உறுப்பினா் செயலா் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளையும் அவா் வகித்துள்ளாா். தெற்கு ரயில்வே தலைமைப் பணியாளா் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள அ.நாராயணனுக்கு தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அலுவலா் எம்.செந்தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.