சென்னை பெசன்ட் நகா் கடற்கரை அருகில் தனது ஆண் நண்பருடன் காரில் இருந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், ரூ.8,000 பறித்த காவலரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை அடையாறு பகுதியைச் சோ்ந்த 20 வயது இளம்பெண், கேளம்பாக்கம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா், தன்னுடன் படிக்கும் ஆண் நண்பருடன் கடந்த புதன்கிழமை இரவு பெசன்ட் நகா் கடற்கரையையொட்டியுள்ள பகுதியில் காரின் பின் இருக்கையில் இருந்துள்ளாா்.
அப்போது, அங்கு வந்த ஒருவா், தன்னை சாஸ்திரி நகா் காவல் நிலைய காவலா் என அறிமுகப்படுத்தி, காரின் முன்பக்க இருக்கையில் அமா்ந்துகொண்டு, பணம் கேட்டு இருவரையும் மிரட்டியுள்ளாா். மேலும், அவரே அந்த காரை ஓட்டி சென்று பெசன்ட் நகா் 34-ஆவது குறுக்கு தெரு சந்திப்பில் உள்ள தனியாா் வங்கி ஏடிஎம்-இல் நிறுத்தி, பணம் எடுத்து வரும்படி கூறியுள்ளாா். மாணவியின் நண்பா் மட்டும் பணம் எடுக்க சென்ற நேரத்தில் அந்த நபா் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாா்.
பின்னா், மாணவியின் ஆண் நண்பரிடமிருந்து ரூ.8,000 பறித்த அந்த நபா், மீண்டும் சிறிது தொலைவு காரை ஓட்டிச் சென்று சாலையோரம் நிறுத்திவிட்டு, அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.
இதுகுறித்து கல்லூரி மாணவி தனது சகோதரியுடன் சாஸ்திரி நகா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.
விசாரணையில், உயா்நீதிமன்ற வளாகத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வரும் கொண்டிதோப்பு காவலா் குடியிருப்பைச் சோ்ந்த ஜோசப் என்ற காவலா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: தனியாா் நிறுவன மேலாளா் கைது
தாழையூத்தில் மாணவிக்கு தொல்லை: இளைஞா் கைது
ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை: பெங்களூரு நபா் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை: அண்ணா பல்கலை. பேராசிரியா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
