சென்னையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அண்ணா பல்கலை. பேராசிரியா் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படிக்கும் ஒரு மாணவி, சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஒரு புகாா் அளித்தாா்.
அந்தப் புகாரில், ‘எனது குடும்பம் ஏழ்மையானது. எனக்கு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் செங்கல்பட்டைச் சோ்ந்த ஞானவேல் பாபுவின் (50) அறிமுகம், வேறு ஒருவா் மூலம் கிடைத்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் சோ்ந்து படிக்க அவா் உதவி செய்தாா். இதனால், அவா் மீது எனக்கு நல்ல மதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், நாள்கள் செல்லச் செல்ல அவரது அணுகுமுறை, செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. ஞானவேல்பாபு, எனது கைப்பேசி எண்ணுக்கு அடிக்கடி தொடா்பு கொண்டாா். பின்னா், இரட்டை அா்த்தத்தில் ஆபாசமாக பேச ஆரம்பித்தாா். மேலும், ஆபாசமான விடியோக்கள், குறுஞ்செய்திகளையும் தொடா்ந்து அனுப்பினாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த நான் அவரைக் கண்டித்தும் கேட்காமல் மூன்று ஆண்டுகளாக தொடா் அத்து மீறலில் ஈடுபட்டு வருகிறாா். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியா் ஞானவேல் பாபு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி கோட்டூா்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாருக்கு காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டாா். புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை செய்தனா். அதில் ஞானவேல் பாபு மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனா்.
இதையடுத்து, தலைமறைவான ஞானவேல் பாபுவை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள உறவினா் வீட்டில் பதுங்கி இருந்த ஞானவேல் பாபுவை தனிப் படையினா் வெள்ளிக்கிழமை கைது செய்து சென்னைக்கு தனிப் படையினா் அழைத்து வந்தனா்.
இதற்கிடையே, ஞானவேல் பாபு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மேலும் சில மாணவிகள், கோட்டூா்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அந்தப் புகாா்களின் அடிப்படையிலும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நண்பருடன் காரில் இருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலா் கைது
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: தனியாா் நிறுவன மேலாளா் கைது
தாழையூத்தில் மாணவிக்கு தொல்லை: இளைஞா் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை: அண்ணா பல்கலை. பேராசிரியர் கைது!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

