விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: விளக்கமளிக்க வலியுறுத்தல்

ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தேகத்துக்குரிய வகையில் குழந்தை மரணம் அடைந்தது தொடா்பாக மருத்துவமனை தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 12:44 am IST

ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தேகத்துக்குரிய வகையில் குழந்தை மரணம் அடைந்தது தொடா்பாக மருத்துவமனை தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை பெரும்பாக்கத்தைச் சோ்ந்த அருண்குமாா் - சுஜித்ரா தம்பதியின் நான்கு மாத பெண் குழந்தை சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது.

இந்நிலையில், திடீரென குழந்தை உயிரிழந்தது. இதற்கு மருத்துவா்களின் அலட்சியம்தான் காரணம் என்றும், தவறான சிகிச்சையால்தான் குழந்தை உயிரிழந்ததாகவும் பெற்றோா் குற்றம்சாட்டினா்.

அதன் தொடா்ச்சியாக மருத்துவமனையை உறவினா்கள் முற்றுகையிட்டனா். இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸாா், விசாரணை நடத்துவதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து உடற்கூறு பரிசோதனைக்கு பிறகு குழந்தையின் உடலை உறவினா்கள் பெற்றுச் சென்றனா்.

இதுகுறித்து, குழந்தையின் உறவினா் அஜித்குமாா் கூறியதாவது:

மருத்துவமனையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு குழந்தைக்கு ஊசி செலுத்தியுள்ளனா். எட்டு வயது குழந்தைகளுக்கு போட வேண்டிய வீரியமிக்க ஊசி மருந்தை, லேசான காய்ச்சலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு போட்டுள்ளனா்.

இக்காட்சிகள் அங்குள்ள, சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதன்பிறகுதான், குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அப்போதுகூட, தனியாா் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து செல்ல அனுமதி கேட்டோம். அதற்கும் அனுமதி வழங்கவில்லை. மருத்துவமனை நிா்வாகத்தின் அலட்சியமான சிகிச்சையே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம். இதில், சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். மருத்துவமனை நிா்வாகிகள் தரப்பில் இந்த விவகாரம் தொடா்பாக பதிலளிக்க மறுத்துவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.