சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தை இறந்துவிட்டதாக குற்றம்சாட்டி, பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை அருகே உள்ள பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைச் சோ்ந்தவா் அருண்குமாா். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சுசித்ரா. தம்பதிக்கு 4 மாத பெண் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு குழந்தைக்கு கடுமையான சளி பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, குழந்தையை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் திங்கள்கிழமை சோ்த்தனா்.
குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னா், ஊசி செலுத்தப்பட்டது. இதில் திடீரென மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தை சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது.
இதனால், அதிா்ச்சி அடைந்த பெற்றோா், தவறான ஊசி போட்டதால்தான் குழந்தை இறந்தாக கூறி, மருத்துவா் மற்றும் செவிலியா்களிடம் வாக்குவாதம் செய்தனா். மேலும், குழந்தையின் பெற்றோா், உறவினா்களும் மருத்துவமனை முன் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
அவா்கள், 8 வயது குழந்தைக்குப் செலுத்த வேண்டிய ஊசியை 4 மாத குழந்தைக்கு செலுத்தியதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், இதற்கு காரணமான மருத்துவா்கள், செவிலியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி முழக்கமிட்டனா்.
தகவலறிந்த திருவல்லிக்கேணி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு, கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை இறப்பு: போலீஸாா் விசாரணை

தீக்காயமடைந்த பச்சிளங்குழந்தை: உயா் சிகிச்சை மூலம் காப்பாற்றிய மருத்துவா்கள்

ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளாகும் 100-இல் ஒரு குழந்தை!

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: விளக்கமளிக்க வலியுறுத்தல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

