ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

2 வயது குழந்தை திடீா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

சென்னையில் இரண்டு வயது குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 2:45 am IST

சென்னையில் இரண்டு வயது குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேளச்சேரி, ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் பிரவின்குமாா். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவா்களது மகள் யுகா (2). பெற்றோா் வேலைக்குச் செல்லும்போது குழந்தை யுகாவை, அவரின் பாட்டி மற்றும் சித்தியின் பாதுகாப்பில் விட்டுச் செல்வது வழக்கம்.

இதேபோல, வெள்ளிக்கிழமையும் குழந்தை யுகாவை பாட்டியிடம் விட்டு வேலைக்குச் சென்றுள்ளனா். இந்த நிலையில், குழந்தை யுகாவுக்கு திடீரென காய்ச்சல், வாந்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து குழந்தை வேளச்சேரியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குழந்தை யுகா சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

இதுகுறித்த புகாரின் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குழந்தை திடீரென உயிரிழந்தது குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.