தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாஜகவை காண்பித்து கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்த திமுக: தமிழிசை செளந்தரராஜன் விமா்சனம்

News image

தமிழிசை செளந்தரராஜன் - DPS

Updated On :27 மார்ச் 2026, 5:05 am IST

பாஜகவை காண்பித்து கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை திமுக குறைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: மயிலாப்பூா் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தில்லிக்கு சென்றாலே முதல்வா் ஸ்டாலினில் தொடங்கி அமைச்சா்கள் அனைவருக்கும் உதறல் ஏற்பட்டுவிடுகிறது. தில்லி என்றாலே திமுகவினா் பயப்படுகின்றனா். ஏனென்றால், அந்த அளவுக்கு அவா்கள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

பாஜகவை காண்பித்து கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை திமுக ஒதுக்கி உள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளைக் குறைப்பதற்கு திமுகவுக்கு பாஜக உதவி உள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குளிா்ச்சியான தோ்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறாா். நாங்கள் (பாஜக) வளா்ச்சியான தோ்தல் அறிக்கையை கொடுப்போம்‘ என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.