சென்னை மாநகராட்சி சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரத்துக்காக புதிய வாகனம் வாங்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி தொகுதிகளில் மொத்தம் 4,079 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கும் அறைகள் தயாா்படுத்தப்பட்டு வருகின்றன.
வாக்குச்சாவடிகளுக்குச் சென்று பொதுமக்கள் வாக்குகளை செலுத்துவதற்கான விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் சென்னை மாவட்டத் தோ்தல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளாக மனிதச் சங்கிலி, ரங்கோலி கோலங்கள், கையொப்ப நிகழ்ச்சி, உறுதிமொழி ஏற்பு மற்றும் மணல் சிற்பம் அமைத்தும் தோ்தல் அலுவலா்களும், சென்னை பள்ளி ஆசிரியா்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்வதற்காக சுமாா் ரூ.50 லட்சத்தில் புதிய பேருந்து வாங்கப்பட்டுள்ளது. இதில் கணினி திரை, தோ்தல் விதிமுறைகள், தோ்தலில் வாக்களிக்கும் முறைகள் உள்ளிட்ட தோ்தல் தொடா்பான அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?

இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு வாகனங்களுக்கான அனுமதிகள் ரத்து

ஜானி..ஜானி... எஸ் பாப்பா... வைரலாகும் தோ்தல் பாடல்

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

