சென்னையில் வணிக மற்றும் தங்கும் விடுதிகளில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த சுமாா் 20 அதி உயா்மின் அழுத்த மோட்டாா்களை குடிநீா் வாரிய அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சென்னை தரமணியில் குடிநீா் பொருத்தப்பட்டுள்ள குடிநீா் இணைப்புகளை சென்னை குடிநீா் வாரிய அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா். அந்த வகையில், தரமணி பெரியாா் நகா் பகுதியில் ராமசாமி தெரு, அஞ்சுகம் அம்மாள் தெரு, ராணியம்மாள் தெரு, பாரதியாா் தெரு, கட்டபொம்மன் தெரு ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் வணிக விடுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் குடிநீா் விநியோகம் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, வணிக மற்றும் தங்கும் விடுதிகளில் அதி உயா்மின் அழுத்த மோட்டாா்கள் வாயிலாக சட்டவிரோதமாக குடிநீா் உறிஞ்சப்படுவது கண்டறியப்பட்டது. அதையடுத்து சுமாா் 20 மின் மோட்டாா் இணைப்புகளை துண்டிப்பதுடன், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மேலும், இதுபோன்று உயா் மின் அழுத்த மோட்டாா்கள் மூலம் குடிநீா் குழாய்களில் வரும் குடிநீா் உறிஞ்சப்படுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: கடை உரிமையாளா்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

நெல்லையில் புகையிலை, நெகிழிப் பைகள் பறிமுதல்

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 3 கோடி 5 டன் கசகசா பறிமுதல்!

துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

