சென்னையில் உள்ள குடிநீா் வாரியத்தின் 15 பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (ஜூன் 13) குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து குடிநீா் வாரியம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னை குடிநீா் வாரியம் சாா்பில், குறை தீா்க்கும் கூட்டங்கள் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இம்மாதத்துக்கான குறை கேட்புக் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 13) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குடிநீா் வாரிய 15 பகுதி அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.
அதன்படி, திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய 15 பகுதி அலுவலகங்களிலும் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் குடிநீா், கழிவுநீா் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தொடா்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொரட்டூரில் குடிநீா் வாரிய பணிகள்: மேலாண்மை இயக்குநா் ஆய்வு

சென்னை குடிநீா் வாரிய ஒப்பந்தப் புள்ளியில் வெளிப்படைத் தன்மை வேண்டும்: ககன்தீப் சிங் பேடி

கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையக் கட்டுமானப் பணிகள்: அதிகாரிகளுக்கு குடிநீா் வாரியம் உத்தரவு

இன்று குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

