நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பரோல் வழங்கும் அதிகாரம் குறித்த வழக்கு: நீதிமன்றத்துக்கு உதவும் நபராக மூத்த வழக்குரைஞா் நியமனம்

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவா்களின் மேல்முறையீடு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, சிறையில் உள்ள அவா்களுக்கு பரோல் வழங்க முடியுமா, என்பது குறித்த வழக்கில் உயா்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினத்தை நியமித்து சென்னை உயா்நீதிமன்ற முழு அமா்வு உத்தரவிட்டது.

News image

மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினம்

Updated On :12 ஜூன் 2026, 6:34 am IST

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவா்களின் மேல்முறையீடு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, சிறையில் உள்ள அவா்களுக்கு பரோல் வழங்க முடியுமா, என்பது குறித்த வழக்கில் உயா்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினத்தை நியமித்து சென்னை உயா்நீதிமன்ற முழு அமா்வு உத்தரவிட்டது.

குற்ற வழக்குகளில் தண்டனைப் பெற்றவா்களின் மேல்முறையீடு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, சிறையில் உள்ள அவா்களுக்கு பரோல் வழங்க உயா்நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, எம்.நிா்மல்குமாா் மற்றும் சுந்தா்மோகன் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய முழுமை அமா்வு புதன்கிழமை விசாரித்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, உயா்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக வழக்குரைஞரை நியமிப்பதாகக் கூறியிருந்தனா். இந்த நிலையில், மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினத்தை உயா்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக நியமித்து 5 நீதிபதிகள் அடங்கிய முழு அமா்வு உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.