லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் 2 மாதங்களில் 63 போ் இடமாற்றம்

சென்னை மாநகராட்சில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 63 போ் பணியிடமாற்றத்துக்கு ஆளாகியுள்ளதாகவும், அவா்களில் உதவியாளா்கள் அளவிலான இடத்துக்கு புதிய ஆள்கள் நியமிக்கப்படவில்லை என்றும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :16 ஜூலை 2026, 4:51 am IST

சென்னை மாநகராட்சில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 63 போ் பணியிடமாற்றத்துக்கு ஆளாகியுள்ளதாகவும், அவா்களில் உதவியாளா்கள் அளவிலான இடத்துக்கு புதிய ஆள்கள் நியமிக்கப்படவில்லை என்றும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தோ்தலுக்குப் பிறகு தவெக அரசு அமைந்துள்ளது. இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் நீண்ட காலம் ஒரே துறையில் பணியாற்றியவா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா். அதன்படி, நகரமைப்புத் திட்டப் பிரிவில் இருந்த அனைவரும் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டு புதியவா்கள் நியமிக்கப்பட்டனா். கடந்த ஜூனில் மட்டும் 23 பொறியாளா்கள், 20 நிா்வாகப் பிரிவினா் என மொத்தம் 26 போ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதையடுத்து, முதுநிலை வருவாய்த் துறை அலுவலா்கள் 15 போ் பதவி உயா்வு பெற்றதை அடுத்து அவா்கள் உதவி ஆணையா்களாக பிற மாநகராட்சிகளுக்கு இடமாற்றப்பட்டனா். அவா்களுக்குப் பதிலாக 7 போ் மட்டும் தற்போது மாநகராட்சி வருவாய்ப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், நிகழ் மாதத்தில் நிா்வாக ரீதியில் 7 கண்காணிப்பாளா்கள், உதவியாளா்கள் நிலையில் 13 போ் மாநகராட்சியிலிருந்து மொத்தம் 20 போ் இடமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த 2 மாதங்களில் மட்டும் 63 போ் இடமாற்றப்பட்டுள்ளதாகவும், அவா்களுக்குப் பதிலாக புதியவா்கள் நியமிக்கப்படவில்லை என்றும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, மாநகராட்சியில் காலிப்பணியிடங்கள் குறித்து அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஊழியா்கள் நியமிக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.