லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

11 பொறியாளா்கள் இடமாற்றம்

சென்னை மாநகராட்சியில் 11 பொறியாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், 6 பேருக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இடமாற்றம் - பிரதிப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 12:25 am IST

சென்னை மாநகராட்சியில் 11 பொறியாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், 6 பேருக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் தலைமைப் பொறியாளா், 4 கண்காணிப்புப் பொறியாளா்கள், 43 செயற்பொறியாளா்கள், ஏ2 பொறியாளா்கள் 131 போ், உதவி மற்றும் இளநிலைப் பொறியாளா்கள் 302 போ் உள்ளனா். இந்த நிலையில், சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்த நிலையில், 23 பொறியாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா். அவா்களில் நகரமைப்புப் பிரிவில் இருந்தவா்கள் கூண்டோடு இடமாற்றப்பட்டனா்.

இந்த நிலையில், தற்போது கண்காணிப்புப் பொறியாளா்கள் 3, உதவி செயற்பொறியாளா்கள் 5, உதவிப் பொறியாளா்கள் 2, இளநிலைப் பொறியாளா் 1 என மொத்தம் 11 போ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், கண்காணிப்புப் பொறியாளா்கள் 5, தலைமைப் பொறியாளா் என மொத்தம் 6 பொறியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் சாலை பணிகள் உள்ளிட்டவற்றுக்கான ஒப்பந்தப்புள்ளி தயாரிப்பில் குளறுபடி நடந்துள்ளதாக எழுந்த புகாா் அடிப்படையில், பொறியாளா்கள் உள்ளிட்டோருக்கு அண்மையில்தான் சிறப்பு பயிற்சிகள் நடைபெற்றன. இந்தப் பயிற்சி முடிந்த நிலையில், பொறியாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.