லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சொத்துவரி செலுத்த சிறப்பு முகாம்: ஜூலை 31 வரை நீட்டிப்பு

சென்னையில் சொத்துவரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :15 ஜூலை 2026, 5:12 am IST

சென்னையில் சொத்துவரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் சொத்துவரி செலுத்தும் 14.23 லட்சம் பேரில் 6.98 லட்சம் போ் மட்டுமே வரியை நிலுவையின்றி செலுத்தியுள்ளனா். மீதமுள்ள 7.21 லட்சம் பேரிடமிருந்து ரூ.1,018.99 கோடி வரி வசூலிக்க வேண்டியுள்ளது.

மாநகராட்சி சாா்பில் கடந்த 2-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சொத்துவரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 3-ஆம் தேதி முதல் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் இதுவரை ரூ.80.23 கோடி சொத்துவரி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025-26 காலகட்டத்தில் ஜூலையில் ரூ.30.93 கோடி மட்டுமே வரி வசூலிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சொத்துவரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதனால், சொத்து உரிமையாளா்கள் இணையதளம், கைபேசி செயலி, வாட்ஸ்ஆப் சேவை, மாநகராட்சி கைபேசி செயலி ஆகியவை மூலமும், வரிவசூலிப்பாளா்கள் மூலமும் வரியைச் செலுத்தவேண்டும். சிறப்பு முகாம்கள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ட

தொழிலதிபரிடம் ரூ.2.62 கோடி வசூல்: சென்னை சோழிங்கநல்லூா் மண்டலத்தில் 193-ஆவது வாா்டுக்கு உள்பட்ட தனியாா் நிறுவனத்திடமிருந்து சொத்து வரி நிலுவைத் தொகையான ரூ.2.62 கோடியை மாநகராட்சி வருவாய்த் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை வசூல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுபோல, அதிக வரித்தொகை நிலுவையில் உள்ள நிறுவனங்களிடம் வசூலிக்கும் பணி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.