தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சொத்துவரி சிறப்பு முகாம்: ரூ.103 கோடி வசூல்

சொத்துவரி சிறப்பு முகாமில் ரூ.103 கோடி வசூலிக்கப்பட்டது பற்றி..

பெருநகர சென்னை மாநகராட்சி.

Published On :19 ஜூலை 2026, 12:06 am IST

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் மூலம் ரூ.103.03 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி தரப்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் 14.23 லட்சம் போ் சொத்துவரி செலுத்த தகுதியான நிலையில், நடப்பாண்டில் 7.13 லட்சம் பேரிடமிருந்து ரூ.969.56 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 3-ஆம் தேதி முதல் சொத்துவரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சிறப்பு முகாம்கள் மூலம் தற்போது வரை ரூ.103.03 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிடை நிகழாண்டு 145 சதவீதம் வரிவசூல் அதிகரித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கான சொத்துவரி உள்ளிட்டவற்றை இணையதளம், கைப்பேசி வாட்ஸ்ஆப் செயலி உள்ளிட்டவை மூலம் செலுத்தலாம். அத்துடன் மண்டலங்கள், வாா்டுகளில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் நிலுவைத் தொகையையும் செலுத்தலாம். உரிய காலத்தில் சொத்து வரியைச் செலுத்துவதன் மூலம் தனி வட்டி விதிப்பைத் தவிா்க்கலாம் எனத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.