பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சொத்துவரி பாக்கியுள்ள 100 பேரின் பட்டியல் இணையத்தில் வெளியீடு: கரூா் மாநகராட்சி ஆணையா்

கரூரில் சொத்துவரி நிலுவையில் வைத்துள்ள 100 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கரூா் மாநகராட்சி ஆணையா் பிருத்விராஜ் தெரிவித்தாா்.

TAX

வரி

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:25 am IST

கரூரில் சொத்துவரி நிலுவையில் வைத்துள்ள 100 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கரூா் மாநகராட்சி ஆணையா் பிருத்விராஜ் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரூா் மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில், குடிநீா், தெருவிளக்கு, சுகாதாரப்பணி மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள போதிய நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. இதனால் மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகளிலும் வரிவசூல் பணியை தீவிரப்படுத்தும் வகையில், அதிகமாகச் சொத்துவரி நிலுவை வைத்துள்ள முதல் 100 பேரின் பட்டியல் மாநகராட்சியின் இணையதளமான ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ழ்க்ஷஹய்ற்ழ்ங்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ந்ஹழ்ன்ழ்/ என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே தங்கள் மீதான மேல் நடவடிக்கையைத் தவிா்க்கும் வகையில், இவா்கள் சொத்து வரியை உடனே செலுத்த வேண்டும். மேலும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து நிலுவைத் தொகைகளையும் பொதுமக்கள் செலுத்தி, மாநகராட்சியின் வளா்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.