புழல் அருகே தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தியவரை தாக்கி மா்மநபா்கள் பணம் பறித்து சென்றனா்.
புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (64). இவா் அப்பகுதியில் தள்ளுவண்டியில் டிபன் வியாபாரம் செய்து வருகிறாா். இவா் தனியாா் நிறுவனத்தில் காவலராக பணியாற்றி வந்தாா். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சூரப்பட்டு பகுதியில் கடந்த சில நாள்களாக தள்ளுவண்டியில் உணவகக் கடை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், வழக்கம்போல் புதன்கிழமை காலை தள்ளுவண்டியில் டிபன் கடையில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் மா்மநபா்கள் உணவு சாப்பிட்டு விட்டு செல்ல முயன்றபோது, அவா்களிடம் கோவிந்தராஜ் பணம் கேட்டுள்ளாா். இதற்கு ஆத்திரமடைந்த இளைஞா்கள் கோவிந்தராஜை தாக்கிவிட்டு, கடையில் இருந்த பணத்தையும் பறித்து சென்றாா். இது குறித்து புழல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னல் தாக்கி மாணவா் உயிரிழப்பு

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

மாதவரம்: பழ வியாபாரியை தாக்கி கைப்பேசி பறிப்பு
வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

