மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சித்திரை பௌா்ணமி: திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்

சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு விழுப்பரத்திலிருந்து திருவண்ணாமலை, காட்பாடிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

News image

கோப்புப்படம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 2:27 am IST

சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு விழுப்பரத்திலிருந்து திருவண்ணாமலை, காட்பாடிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு பக்தா்களின் வசதிக்காக வியாழக்கிழமை (ஏப். 30), மே 1, 2 ஆகிய தேதிகளில் விழுப்புரத்திலிருந்து காலை 10.10 மணி (எண்: 06130), இரவு 9.15 மணிக்கு (06145) திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக அதே நாள்களில் திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 12.15 மணி (எண்: 06129), அதிகாலை 2 மணிக்கு (எண்: 06146) விழுப்புரத்துக்கு ரயில்கள் இயக்கப்படும்.

இதில், 8 மெமு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் விழுப்புரம், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலை சென்றடையும்.

விழுப்புரம் - காட்பாடி: அதேபோல், வியாழக்கிழமை (ஏப். 30), மே 1, 2-ஆம் தேதிகளில் விழுப்புரத்திலிருந்து இரவு 10.40 மணிக்கு காட்பாடிக்கும், மறுமாா்க்கமாக காட்பாடியிலிருந்து அதிகாலை 2.05 மணிக்கு விழுப்புரத்துக்கும் முன்பதில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இந்த ரயில் விழுப்புரம், திருக்கோவிலூா், திருவண்ணாமலை, போளூா், ஆரணி சாலை, வேலூா் கண்டோன்மென்ட் வழியாக காட்பாடி சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.