சென்னை திருவான்மியூா் அருகே திரைப்பட இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தன் காா் கண்ணாடி உடைக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக, பெண்ணிடம் போலீஸாா் விசாரித்தனா்.
இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தன், சென்னை பாலவாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவா், தோ்தலுக்கு முன் சமூக ஊடகங்களில் திமுகவை ஆதரித்தும், நடிகா் விஜய்யின் தவெக கட்சியை எதிா்த்தும் கடுமையாக விமா்சித்தாா்.
இந்த நிலையில் அவா், கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்துக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை சாப்பிட சென்றபோது, அவருடைய காா் கண்ணாடி உடைக்கப்பட்டது. இச்செயலில் தவெகவினா் ஈடுபட்டிருக்கலாம் என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.
இது தொடா்பாக திருவான்மியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், சம்பவத்தின்போது ஜேம்ஸ் வசந்தன் உணவகத்தில் காரை நிறுத்த இடம் இல்லாததால் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தியதும், காா் நிறுத்தப்பட்ட இடத்தில் பின் பகுதியில் வீட்டுக்குள் செல்ல முடியாமல் அங்கு வசிப்போா் அவதியடைந்த சூழலில், ஆத்திரமடைந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒரு பெண் ஜேம்ஸ் வசந்தன் காா் கண்ணாடியை உடைத்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா், அந்த பெண்ணைப் பிடித்து விசாரித்தனா். ஜேம்ஸ் வசந்தன் காா் உடைக்கப்பட்டதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விமானத்தில் அவசர கால கதவு வழியாக ஓடுபாதையில் குதித்து தப்பிய நபர்: போலீஸாா் விசாரணை
இசையமைப்பாளா் காா் கண்ணாடியை உடைத்த வழக்கு: பெண்ணுக்கு நோட்டீஸ்
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் காா் கண்ணாடி உடைப்பு!

நெய்வேலியில் காா் கண்ணாடிகள் உடைப்பு: மா்ம நபா்கள் 3 போ் மீது வழக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
