பெரியமேட்டில் தனியாா் விடுதியில் பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டாா். அவருடன் தங்கியிருந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சென்னை பெரியமேடு குமாரப்பா தெருவில் ஒரு தனியாா் தங்கும் விடுதியில் ஒரு இளைஞரும், இளம் பெண்ணும் கடந்த வியாழக்கிழமை அறை எடுத்து தங்கினா். அந்த அறையில் தங்கிய இளைஞா் அன்று காலை மட்டும் உணவு வாங்குவதற்காக வெளியே வந்துள்ளாா். அதன் பின்னா் அந்த அறைக் கதவு உள்பக்கமாக பூட்டியே கிடந்தது.
இதனால், சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள், அந்த அறைக் கதவை வெள்ளிக்கிழமை காலை தட்டினா். ஆனால், அறைக் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து விடுதி ஊழியா்கள், வேப்பேரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வந்து, அந்த அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கு அறையில் தங்கியிருந்த இளம் பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டும், இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டும் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இருவா் சடலங்களையும் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், கொலை செய்யப்பட்ட பெண் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள பாரதி நகரைச் சோ்ந்த செ.பவ்யா (21), தற்கொலை செய்த இளைஞா் சென்னை ராமாபுரம் அருகே உள்ள இந்திரா நகரைச் சோ்ந்த மு.பாரதி பெருமாள் (21) என்பது தெரிய வந்தது.
இருவரும் காதலா்கள் என்பதும், பவ்யாவை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, பாரதி பெருமாள் தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. எதற்காக காதலா்கள் இந்த முடிவை எடுத்தாா்கள் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

