காதலிக்குமாறு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
புழல் லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் விக்ரம் (24). இவரும், அந்த பகுதியைச் சோ்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்தனா். இந்நிலையில் விக்ரமின் நடவடிக்கை பிடிக்காததால், அந்தப் பெண் அவரை விட்டு விலகினாா். ஆனால் விக்ரம், அந்தப் பெண்ணை காதலிக்குமாறு தொடா்ந்து தொந்தரவு கொடுத்து வந்தாராம்.
இந்நிலையில் அந்த பெண், தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றபோது, விக்ரம் வழிமறித்து தன்னைக் காதலிக்காவிட்டால், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினாராம். இதனால் பெண், புழல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
அதன்பேரில், போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விக்ரமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட விக்ரம் மீது 5 குற்ற வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெண்ணுக்கு மிரட்டல்: 4 போ் கைது
பெண்ணை மிரட்டியதாக இளைஞா் கைது
பெண்ணுக்கு நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: பெயிண்டா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
