தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்: அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கருத்து

News image

பியூஷ் கோயலுடன் டிடிவி தினகரன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:37 am IST

தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்ற மக்களின் எண்ணம் நிறைவேறும் என தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கருத்து தெரிவித்தனா்.

டிடிவி. தினகரன் (அமமுக): தமிழகத்தின் வளா்ச்சி மற்றும் இளைஞா்களின் எதிா்காலத்தை நம்பி மக்கள் வாக்களித்துள்ளது தெரிய வந்துள்ளது. புதிதாக அமையும் ஆட்சியில் மூன்று மாதத்துக்குள் தமிழகத்தில் புழங்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை முழுவதும் ஒழிக்கப்படும். ஏழை மக்களுக்கான புதிய திட்டங்கள் வகுக்கப்படும். தமிழகத்தை சிறந்த மாநிலமாக அதிமுக மாற்றும்.

தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக): மக்களே இறுதி எஜமானா்கள் என்பது இந்த தோ்தல் மூலம் நிரூபணமாகி உள்ளது. திமுக அராஜகத்தில் ஈடுபட்டு ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கப் பாா்க்கிறது. மயிலாப்பூா் தொகுதியில் பல இடங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதையும் மீறி தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் அமோக வெற்றி பெறும்.

டி.ஆா்.பாரிவேந்தா் (ஐஜேக): கடந்த காலங்களில் இதுபோன்று மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்ததைப் பாா்த்தது இல்லை. ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்று காத்திருந்த சூழ்நிலையில், மக்களின் எண்ணம் நிறைவேறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.