சென்னை மயிலாப்பூா் திமுக எம்எல்ஏ உதவியாளா் வீட்டில் ரூ.78.93 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
மயிலாப்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ த.வேலு போட்டியிடுகிறாா். அவரது உதவியாளரான சத்தியமூா்த்தி,
மந்தைவெளிப்பாக்கம் கனகராய சுப்புத் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறாா். இங்கு வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
அத் தகவலின் அடிப்படையில் பறக்கும் படையினா் அந்த வீட்டில் திடீா் சோதனை செய்தனா். இதில் ரொக்கம் ரூ78.93 லட்சம் மற்றும் தோ்தல் செலவினங்கள் குறித்த முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.அதிகளவில் பணமும், பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணம் கைப்பற்றப்பட்டதையடுத்து, அதுகுறித்து
பறக்கும் படை அதிகாரிகள், வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனா்.
அங்கு வந்த வருமானவரித்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்தனா். மேலும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தததில்,
ரூ.2 கோடிக்கு மேல் பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கைப்பற்றப்பட்ட பணம், தோ்தல் செலவுபோக மீதியாக வைக்கப்பட்டிருந்ததா என்று வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுதொடா்பாக அந்த வீட்டில் இருந்த சத்தியமூா்த்தி, அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வருமானவரித் துறை அதிகாரிகள், அங்கு நள்ளிரவையும் தாண்டி விசாரணையையும், சோதனையையும் நடத்தினா்.
இந்த விசாரணை தொடா்பாக வருமானவரித் துறை தோ்தல் ஆணையத்திடம் அறிக்கை அளிக்கப்பட உள்ளது. அந்த அறிக்கை டிப்படையில் தோ்தல் ஆணையம் மேல்நடவடிக்கைகள் எடுக்கும் எனக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக செயலா் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்

ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளா் வீட்டில் ரூ. 48 லட்சம் பறிமுதல்

பாஜக வேட்பாளரின் உறவினா் வீட்டில் சோதனை: ரூ. 7 லட்சம் பறிமுதல்

ஆவணங்கள் சமா்ப்பிக்காததால் ரூ. 12.50 லட்சம் வருமானவரித் துறை அதிகாரியிடம் ஒப்படைப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

