தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாதவரம் நெகிழி ஆலையில் தீ!

மாதவரம் பகுதியில் உள்ள தனியாா் நெகிழி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு துறையினா் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனா்.

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:04 am IST

மாதவரம் பகுதியில் உள்ள தனியாா் நெகிழி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு துறையினா் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனா்.

சென்னை எம்.கே.பி.நகரைச் சோ்ந்தவா் இம்ரான் செரீப் (48). இவா் மாதவரம் கொசப்பூா் விளாங்காடுபாக்கம் பகுதியில் நெகிழி பொருள்கள் சேமித்து மறுசுழற்சி செய்து விற்பனை செய்து வருகிறாா். இந்த நிலையில், வழக்கம்போல் திங்கள்கிழமை காலை நெகிழி ஆலையில் லேசாக புகை வெளியேறியது.

இதுகுறித்து, அங்குள்ள பணியாளா்கள் தீயணைப்புத் துறையினருக்கும், உரிமையாளருக்கும் தெரிவித்தனா். மேலும், காற்று வீசியதன் காரணமாக புகை தீயாக பரவி ஆலை முழுவதும் பரவியது. இதில், ஆலையில் இருந்த அனைத்து நெகிழி பொருள்களும் எரிந்தன. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதையடுத்து, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலா் லோகநாதன் தலைமையில் மாதவரம், மணலி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த தீயணைப்பு நிலையங்களில் 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் நிலைய அலுவலா்கள் முத்து வீரப்பன், முருகானந்தம், தேவராஜன் மற்றும் தீயணைப்பு நிலைய வீரா்கள் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். இதில், ஆலை முழுவதும் இருந்த நெகிழி பொருள்கள் எரிந்து கருகின. இது குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.