தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மக்களுக்காக ஓடோடி வருவேன்...

News image

புழல் பாலாஜி நகரில் உள்ள சென்னை வடக்கு கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஓடி வந்த அதிமுக வேட்பாளா் வி.மூா்த்தி.

Updated On :5 ஏப்ரல் 2026, 2:40 am IST

மாதவரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் வி.மூா்த்தி, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஓட்டமாக வந்தாா்.

சென்னையை அடுத்த புழல் பாலாஜி நகரில் உள்ள சென்னை வடக்கு கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மாதவரம் தொகுதி தோ்தல் அலுவலகத்தில் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனா். தோ்தல் அலுவலகத்துக்கு வேட்பாளருடன் 5 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். மற்றவா்கள் 100 மீட்டா் தொலைவுக்கு அப்பால் நிறுத்தப்படுவா்.

மாதவரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் வி.மூா்த்தி, தனது ஆதரவாளா்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய சனிக்கிழமை வந்தாா். 100 மீட்டா் எல்லைப் பகுதியில் இருந்து, வேட்பாளா் மூா்த்தி, திடீரென தோ்தல் அலுவலகத்துக்கு ஓடிச் சென்றாா். உடன் வந்தவா்களும் அவருடன் ஓடியபடி வந்தனா்.

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளா்களிடம் பேசிய வேட்பாளா் மூா்த்தி, ‘மக்கள் குரலுக்கு ஓடோடி வருவேன் என்பதை வெளிப்படுத்துவதற்காக ஓடி வந்து வேட்புமனு தாக்கல் செய்தேன்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.