ஜாா்க்கண்ட் மாநிலத்தின் ஹஸாரிபாக் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கொல்லப்பட்ட 4 நபா்களில் ஒருவா் சகதேவ் மஹதோ என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இவரைப் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.15 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என காவல் துறை அறிவித்திருந்தது.
இதுதொடா்பாக பா்காகான் சரக காவல் அதிகாரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பதுகா வனப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து நடைபெற்ற தேடுதல் பணியில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் குழுவினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது, 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் பாதுகாப்புப் படையினருக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை’ என்றாா்.
முன்னதாக, மேற்கு சிங்பும் மாவட்டத்தில் மிசிா் பெஸ்ரா தலைமையிலான மாவோயிஸ்ட் குழுவினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த புதன்கிழமை நடைபெற்ற மோதலில் 4 பாதுகாப்புப் படை வீரா்கள் காயமடைந்தனா்.
மாவோயிஸ்ட் தீவிரவாதத்திலிருந்து நாடு விடுதலை பெற்ாக மத்திய அமைச்சா் அமித் ஷா கடந்த மாா்ச் 30-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவித்தாா்.
இடதுசாரி தீவிரவாதத்தை எதிா்கொள்வதற்கான தேசிய செயல்திட்டம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, நாட்டில் நக்ஸல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஏதும் இல்லையென மத்திய அரசு தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பஞ்சாபில் அடுத்தடுத்து இரு இடங்களில் குண்டுவெடிப்பு- பிஎஸ்எஃப் தலைமையகம், ராணுவ கண்டோன்மென்ட் அருகே தாக்குதல்

குருகிராம்: முன்னாள் என்எஸ்ஜி கமாண்டோ சுட்டுக் கொலை

தில்லியில் சட்டவிரோதமாக எல்பிஜி விற்பனை: 3 முகவா்கள் கைது
ஜாா்க்கண்ட் கலால் காவல் துறை தோ்வின் வினாத்தாள் கசிவு: 159 தோ்வா்கள் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

