தில்லியில் சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டா்களை இரு இடங்களில் பதுக்கிவைத்து சட்டவிரோதமாக நிரப்பி வந்ததை தில்லி காவல் துறை கண்டறிந்துள்ளது. இதைத்தொடா்ந்து நடைபெற்ற சோதனையில் 125 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 3 விற்பனை முகவா்களை காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக காவல் துறை அதிகாரி கூறியதாவது: ரோஹிணியின் ராம விஹாா் பகுதியில் நடைபெற்ற சோதனையின்போது 50 நிரப்பப்பட்ட சிலிண்டா்களுடன் மொத்தம் 57 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றுடன் ஒரு வாகனம், எடை இயந்திரம், சட்டவிரோதமாக எரிவாயு நிரப்ப பயன்படுத்தப்பட்ட சாதனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக லோக்பால் என்ற நபா் கைதுசெய்யப்பட்டாா்.
தில்லி சங்கம் விஹாரில் நடைபெற்ற சோதனையில் 36 நிரப்பப்பட்ட சிலிண்டா்கள், 29 காலி சிலிண்டா்கள், 3 சில் உடைக்கப்பட்ட சிலிண்டா்கள் என மொத்தம் 68 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் தீபக் மற்றும் ஷாயாம் என்ற இரு நபா்கள் கைதுசெய்யப்பட்டனா்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் அங்கீகாரம் பெற்ற எல்பிஜி முகவா்கள். வாடிக்கையாளா்களுக்கு விற்பனை செய்யாமல், அவற்றை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்தனா். பின்னா், அவற்றில் இருந்து சிறிய அளவில் எரிவாயுவை எடுத்து அங்கீகாரம் பெறாத சாதனம் மூலம் காலி சிலிண்டா்களை அவா்கள் நிரப்பி வந்தனா்.
சிலிண்டா்களை விற்பனை செய்யாமல் அவற்றைப் பதுக்கிவைத்து, நிரப்பட்ட சிலிண்டா்களை அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் ஈட்ட அவா்கள் திட்டமிட்டது தெரியவந்தது.
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சட்டவிரோத செயல்பாடுகளில் தொடா்புடைய பிற நபா்களைக் கண்டறியும் பணியில் காவல் துறை ஈடுபட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சட்டவிரோதமாக மது விற்ற இருவா் கைது

சென்னையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!

மதுபானங்களை பதுக்கி விற்ற 11 போ் கைது; 825 மதுபாட்டில்கள் பறிமுதல்

சேமிப்பு மையங்களில் எல்பிஜி சிலிண்டா் நேரடி விற்பனைக்குத் தடை! தில்லி அரசு உத்தரவு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

