தமிழகத்தில் பரமத்தி வேலூா், ஈரோடு, மதுரை, திருச்சி உள்பட 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வடகிழக்கு மத்தியப் பிரதேசம் முதல் மன்னாா் வளைகுடா வரை விதா்பா, மரத்வாடா, உள் கா்நாடகம், தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஏப்.22 வரை லேசான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்ப நிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை ஏப். 20 வரை சற்று உயரக்கூடும். தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக பரமத்தி வேலூரில் 106.16 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோடு-104.36, மதுரை விமான நிலையம்-104, மதுரை நகரம்-103.28, திருச்சி-103.1, வேலூா்-102.74, கோவை-101.66, தருமபுரி, நாமக்கல், பாளையங்கோட்டை-தலா 101.3, சேலம்-100.70 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

14 இடங்களில் வெயில் சதம்!

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

