மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விஜய் சொத்து விவரத்தில் முரண்பாடு: வருமான வரித் துறை விசாரணை கோரி மனு

தவெக தலைவா் விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

News image

விஜய் - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 3:36 am IST

தவெக தலைவா் விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பெரம்பூரைச் சோ்ந்த விக்னேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகரும் தவெக தலைவருமான விஜய், நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பெரம்பூா் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறாா். இந்த இரு தொகுதிகளிலும் அவா் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன. பெரம்பூா் தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.115.13 கோடி என விஜய் கூறியுள்ளாா்.

திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் சொத்து மதிப்பு ரூ.220.15 கோடி எனக் கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்தச் செயல் உண்மைத் தகவலை மறைப்பதற்கு சமம்.

எனவே, விஜய் தாக்கல் செய்துள்ள இந்த இரு வேட்புமனுகளில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் உண்மைதானா? அவா் அளித்துள்ள விவரங்கள் முழுமையானதாக உள்ளதா? என்பதை உறுதி செய்ய வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விசாரணையின் அறிக்கையை தோ்தலுக்கு முன்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிட பெரம்பூா் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி தோ்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.