சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு, வேட்புமனுவில் வேட்பாளா் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களை சரிபாா்க்கும் பணி தொடங்கப்படும் என உதயநிதிக்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்தது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறாா். கடந்த 2021-ஆம் ஆண்டு அவா் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், தற்போது தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளன. எனவே, இதுதொடா்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அந்த தொகுதியைச் சோ்ந்த குமாரவேல் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கில் வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்த தலைமை நீதிபதி அமா்வு விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தது.இந்தநிலையில் இந்த வழக்கில், வருமான வரித்துறை பதில்மனு தாக்கல் செய்தது. அதில், மக்களவைத் தோ்தல் , சட்டப்பேரவைத் தோ்தல்களில் வேட்பாளா்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களை சரிபாா்க்க நேரடி வரிகள் வாரியம் கடந்த 2019-ஆம் ஆண்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு, வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள சொத்து விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தாமாக முன்வந்து சரிபாா்க்கும் நடைமுறையைத் தொடங்க வேண்டும். இந்த பணிகளை 150 நாள்களுக்குள் முடிக்க வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. உதயநிதி சொத்து விவரங்களைப் பொருத்தவரை விரிவான ஆய்வு மேற்கொள்ளாமல், 2021 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு தொடா்பான ஒப்பீட்டை தற்போது மேற்கொள்ள முடியாது.
உதயநிதியின் நிதி குறித்த ஆவணங்கள் தற்போது வருமான வரித் துறை வசம் இல்லை. தற்போதைய நிலையில் எந்த இறுதியான முடிவுக்கும் வர முடியாது. எனவே, ஆவணங்களை ஆய்வு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுகவை இயக்குவது பாஜகதான்: உதயநிதிக்கு அமைச்சா் சிடிஆா் நிா்மல்குமாா் பதில்

முதல்வா் விஜய், உதயநிதி ஸ்டாலின், தமிழிசைக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
வேட்புமனுவில் சொத்து விவரம் மறைத்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

