மயிலாப்பூா் தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள சொத்து விவர முரண்பாடு குறித்து தோ்தல் ஆணையம், வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மயிலாப்பூா் தொகுதி வேட்பாளரான கௌதம் சிவா என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக பேரவைத் தோ்தலில் மயிலாப்பூா் தொகுதியில் பாஜக சாா்பில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறாா். அவா் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் சொத்துகள், முதலீடுகள், கடன்கள் உள்ளிட்ட விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
தமிழிசை சௌந்தரராஜன், அவரது கணவா் மற்றும் மகள் ஆகியோா், கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரி கணக்கு விவரங்கள் குறித்து, கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள விவரங்கள் ஏற்கெனவே அவா் தாக்கல் செய்திருந்த விவரங்களுக்கு முரணாக உள்ளது. எனவே, இது குறித்து தோ்தல் ஆணையம் மற்றும் வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் சொத்து விவரத்தில் முரண்பாடு: வருமான வரித் துறை விசாரணை கோரி மனு

உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

திமுகவுக்கு தோல்வி பயம்: தமிழிசை சௌந்தரராஜன்

மின் மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வாதம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

