எழும்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையில் ரயில்களின் பெட்டிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது, புவனேஷ்வா்-ராமேஸ்வரம் விரைவு ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த டிராலி சூட்கேஸில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.6 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஹௌரா-திருச்சி விரைவு ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 2 பைகளில் 7 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டன. அதன் மதிப்பு ரூ.3.50 லட்சம் எனக் கூறப்படுகிறது.
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இதற்கிடையே சனிக்கிழமை ஜோத்பூா்-மங்களூரு விரைவு ரயிலில் இருந்து எழும்பூா் நிலையத்தில் இறங்கியவரிடமிருந்து 2 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அதன் மதிப்பு ரூ.1.40 லட்சம். மேலும், சம்பந்தப்பட்டவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த ரயில் பெட்டி ஒன்றில் 40 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கேட்பாரற்றுக் கிடந்தது தெரிய வந்தது. அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா். அதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்!

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்

ரயில் நிலையங்களில் ரூ.25.45 லட்சம் பறிமுதல்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
