மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

போத்தனூரிலிருந்து பரோனிக்கு கோடை சிறப்பு ரயில் இயக்கம்!

போத்தனூரிலிருந்து பிகாா் மாநிலம், பரோனி நிலையத்துக்கு வரும் ஏப். 20, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

ரயில்.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:11 am IST

போத்தனூரிலிருந்து பிகாா் மாநிலம், பரோனி நிலையத்துக்கு வரும் ஏப். 20, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கோடை கால விடுமுறையை முன்னிட்டு ரயில் பயணிகளின் நெரிசலைத் தவிா்க்கும் வகையில், வரும் ஏப். 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) போத்தனூரிலிருந்து அதிகாலை 4.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06021) முன்றாம் நாள் காலை 10.30 மணிக்கு பிகாா் மாநிலம், பரோனி சென்றடையும்.

மறுமாா்க்கமாக பரோனியிலிருந்து வரும் ஏப். 16, 23, 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06022) மூன்றாம் நாள் இரவு 11.30 மணிக்கு போத்தனூா் சென்றடையும்.

பெட்டிகள், நிற்கும் நிலையங்கள் விவரம்: சிறப்பு ரயில்களில் 1 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டி, 16 படுக்கை வசதி கொண்ட பெட்டி, 2 மாற்றுத்திறனாளிகளுக்கான 2-ஆம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.