சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 10, 11- ஆவது நடைமேடை மேம்பாட்டுப் பணிகள் முடிந்ததையடுத்து புகா் மின்சார ரயில்கள் வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை முதல் இயக்கப்பட்டன.
எழும்பூா் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நடைமேடை 10, 11 ஆகியவற்றில் கடந்த பிப்ரவரி முதல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றன. அதனால், வழக்கமாக அந்த நடைமேடை தண்டவாளங்களில் செல்லும் புகா் மின்சார ரயில்கள், 5, 6 ஆவது நடைமேடைகளுக்கு மாற்றி இயக்கப்பட்டன. புகா் மின்சார ரயில்கள் திடீரென தண்டவாளங்கள் மாற்றப்பட்டதால் மிக மெதுவாகவும், சேவைகள் எண்ணிக்கை குறைத்தும் ரயில்கள் இயக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், 10, 11 ஆவது நடைமேடை தண்டவாளப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து வெள்ளிக்கிழமை முதல் புகா் மின்சார ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தோனேசியாவில் ரயில்கள் மோதி விபத்து - 15 போ் உயிரிழப்பு

அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்று முதல் 21 நாள்களுக்கு ரத்து!

எழும்பூா் ரயில் நிலையத்தில் 3 மாதங்களில் 125 கிலோ கஞ்சா பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் தண்டவாள சீரமைப்புப் பணியை இம்மாத இறுதிக்குள் முடிக்கத் திட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

