சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை எண் 10,11-ல் நடைபெற்று வந்த மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளை(ஏப். 3) முதல் வழக்கமான அட்டவணைப்படி ரயில்கள் இயக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
எழும்பூர் ரயில் நிலையம் தென் மாவட்டங்களின் முனையமாக செயல்பட்டுவருகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் தென் மாவட்டங்களுக்கு இங்கிருந்தே சென்று வருகின்றன.
புறநகர் மின்சார ரயில்களும் தினமும் 200-க்கும் மேற்பட்ட முறை எழும்பூர் ரயில் நிலையத்தை கடந்து சென்று வருகின்றன. எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணி கடந்த 2024- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரூ. 820 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவருகிறது.
இதில், 1 முதல் 11- ஆம் தண்டவாளங்கள் வரை சீரமைக்கும் பணிகள் 2025- ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்றுவருகின்றன. அதையடுத்து 10, 11-ஆவது தண்டவாள சீரமைப்புப் பணி கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கப்பட்டது. அவ்விரு தண்டவாளங்களில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இந்த சீரமைப்புப் பணி காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் தற்போது 5, 6 ஆகிய தண்டவாளங்களில் இயக்கப்பட்டுவருகின்றன.
தண்டவாள சீரமைப்பால் எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில்கள் சிக்னலுக்காக வேகம் குறைக்கப்பட்டும், நிறுத்தியும் இயக்கப்படுகின்றன. அதனால் அவற்றின் 50 க்கும் மேற்பட்ட சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. மின்சார ரயில் சேவை குறைப்பால் பயணிகள் சிரமமடைந்துள்ளனர்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் 10, 11- ஆவது தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை முதல் ரயில்கள் அந்தத் தண்டவாளங்களில் இயக்கப்படும் என்றும் பழைய அட்டவணையே பின்பற்றப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Summary
Suburban trains will operate on their regular schedule from tomorrow (April 3) at Egmore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தோனேசியாவில் ரயில்கள் மோதி விபத்து - 15 போ் உயிரிழப்பு

சென்னையில் விரைவில் 2-வது ஏசி புறநகர் ரயில்! சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இயக்கம்?

அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்று முதல் 21 நாள்களுக்கு ரத்து!

சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


