காங்கிரஸ் தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியது குறித்து விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து மக்களவை காங்கிரஸ் தலைமை கொறடாவும் விருதுநகர் தொகுதி உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் விலகினார்.
இதற்கான கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் அனுப்பினார்.
ஆனால், என்ன காரணத்துக்காக இந்தப் பதவியை ராஜிநாமா செய்தார் என்பதை அவர் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் இருந்த நிலையில், இன்று(ஏப். 2) காணொலி வெளியிட்டு மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
”நேற்றிலிருந்து தேவையில்லாத குழப்பம் நடந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு என்னால் சிரமமும் ஏதும் வரக்கூடாது என்று நினைப்பவன் நான். தேர்தல் தொடர்பாக மாநில அளவிலான சில பொறுப்புகள் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தது.
அந்தப் பொறுப்புகளில் நான் தொடரவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் தெரிவித்துவிட்டேன். இது கடந்த 4 நாள்களுக்கு முன்பு, அதாவது மார்ச் 28 ஆம் தேதி நடைபெற்ற ஒன்று
அதைப்பற்றிய விவாதங்கள் தற்போது தேவையில்லாதது. மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற வேண்டும். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெருவதற்காக நான் அயராது உழைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
Virudhunagar Lok Sabha MP Manickam Tagore has provided an explanation regarding the Congress party stepping down from election responsibilities.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress

திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கானது; முடிந்துவிட்டது! காங்கிரஸ்
தோற்றாலும் தோல்வியில்லை! வெற்றி நிச்சயம்! மாணிக்கம் தாகூரின் பதிவு வைரல்
பெண்களுக்குத் தொகுதியை விட்டுக்கொடுக்க மோடியும் அமித் ஷாவும் தயாரா? மாணிக்கம் தாகூர் சவால்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


