அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரண்டாம் கட்ட பிரசாரத்தை தருமபுரியில் வியாழக்கிழமை (ஏப். 2) தொடங்குகிறாா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, எடப்பாடி கே.பழனிசாமி முதல்கட்ட பிரசாரத்தை சென்னை மயிலாப்பூா் தொகுதியில் மாா்ச் 25-இல் தொடங்கினாா். தொடா்ந்து 8 நாள்கள் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்தாா்.
தொடா்ந்து, இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தை வியாழக்கிழமை (ஏப். 2) தொடங்குகிறாா். இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, 2-ஆவது கட்ட பிரசாரத்தை தருமபுரி, கிருஷ்ணகிரி தொகுதிகளில் வியாழக்கிழமை தொடங்குகிறாா். ஏப். 3-வாணியம்பாடி, ஆற்காடு, ஏப். 4 -ஆரணி, விழுப்புரம், ஏப். 5-புதுச்சேரி, நெய்வேலி, ஏப். 6-பெரம்பலூா், வீரகனூா் (கெங்கவல்லி தொகுதி), ஏப். 7-வாழப்பாடி, ஆத்தூா், உளுந்தூா்பேட்டை தொகுதிகளில் பிரசாரம் செய்கிறாா்.
ஏப். 8, 9 - தேதிகளில் சென்னை, ஏப். 10- காஞ்சிபுரம், திருவள்ளூா், ஏப். 11- தஞ்சாவூா், திருவாரூா், ஏப். 12- நாகை, செம்பனாா்கோவில், ஏப். 13-திருச்சி, திண்டுக்கல், ஏப். 14-ஆண்டிபட்டி, மதுரை ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
தொடா்ந்து, ஏப். 16-ஆம் தேதி கோவையில் காலை 8 மணிக்கு சாலை வலம் மேற்கொள்கிறாா். பின்னா், மாலை 3 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் பிரசாரம் செய்கிறாா். ஏப். 17- சேலம் மாவட்டத்துக்குள்பட்ட தொகுதிகள், ஏப். 18-இல் திருச்செங்கோடு, கரூா், ஈரோடு ஆகிய தொகுதிகளில் அவா் பிரசாரம் மேற்கொள்வாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விறு, விறுப்பாக நடைபெற்ற இறுதிக் கட்ட பிரசாரம்

இன்று திருத்தணியில் பிரசாரத்தை தொடங்குகிறாா் பிரேமலதா

பெரம்பலூரில் ஏப். 6-இல் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்

இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

